டி-20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை! 6 பந்துகளில் 5 விக்கெட்.!
டி-20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை! 6 பந்துகளில் 5 விக்கெட். T -20 கிரிக்கெட் வரலாற்றில் 6 பந்துகளில் 5 விக்கெட் எடுத்து பஹ்ரைன் அணியின் ரிஸ்வான் பட் புதிய சாதனை படைத்துள்ளார். மலேசியாவில் 4 நாடுகளுக்கிடையேயான டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. மலேசியா, கத்தார், பஹ்ரைன் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்று அவரும் இந்த டி-20 தொடரில் பஹ்ரைன் மற்றும் சிங்கப்பூர் ஆகிய அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் பஹ்ரைன் அணியின் ரிஸ்வான் பட் டி-20 வரலாற்றில் 6 பந்துகளில் 5 விக்கெட் எடுத்த முதல் கிரிக்கெட்டர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரிஸ்வான், சிங்கப்பூர் அணிக்கு எதிரான 18 ஆவது ஓவரில் 3,4, 6ஆவது ப...