டி-20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை! 6 பந்துகளில் 5 விக்கெட்.!

 

டி-20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை! 6 பந்துகளில் 5 விக்கெட்.                                                                                                       T -20 கிரிக்கெட் வரலாற்றில் 6 பந்துகளில் 5 விக்கெட் எடுத்து பஹ்ரைன் அணியின் ரிஸ்வான் பட் புதிய சாதனை படைத்துள்ளார்.

  

மலேசியாவில் 4 நாடுகளுக்கிடையேயான டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. மலேசியா, கத்தார், பஹ்ரைன் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்று அவரும் இந்த டி-20 தொடரில் பஹ்ரைன் மற்றும் சிங்கப்பூர் ஆகிய அணிகள் இன்று மோதின.

இந்த போட்டியில் பஹ்ரைன் அணியின் ரிஸ்வான் பட் டி-20 வரலாற்றில் 6 பந்துகளில் 5 விக்கெட் எடுத்த முதல் கிரிக்கெட்டர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரிஸ்வான், சிங்கப்பூர் அணிக்கு எதிரான 18 ஆவது ஓவரில் 3,4, 6ஆவது பந்துகளில் விக்கெட்டும், அடுத்து 20ஆவது ஒவரிலும் தொடர்ச்சியாக முதல் இரண்டு பந்துகளில் விக்கெட் எடுத்து 6 பந்துகளில் மொத்தமாக 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.                                                                                                                                                      முதலில் பேட் செய்த சிங்கப்பூர் அணி, 20 ஓவர்களில் 168 ரன்கள் குவித்தது. 169 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஹ்ரைன் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது.                                 
3d printing services please visit www.eprado.in
                                                  

Comments

Popular posts from this blog

Application of 3D printing in Education Sector

திருமண உதவித்தொகை ரூ.20,000 கிடையாது, 50 ஆயிரம் தான்.! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.!

பெட்ரோலும் தேவையில்லை, சார்ஜூம் போட வேணாம்! மார்கெட்டையே அடித்து நொறுக்கப்போகும் புதிய எம்ஜி எம்பிவி கார்!