IPL Records: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய டாப் 2 பிளேயர்ஸ்

 

IPL Records: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய டாப் 2 பிளேயர்ஸ்!!!              

இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இம்மாத இறுதியில் தொடங்குகிறது.                            

ஐபிஎல் என்றால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.              

குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டி என்பதால் சீக்கிரமாகவே முடிந்துவிடும். அதனால் இந்த போட்டியை பார்க்க பெரும்பாலான ரசிகர்கள் நேரத்தை செலவிடுவர். பல்வேறு நகரங்களில் நடப்பதால் உள்ளூர் ரசிகர்கள் மைதானத்தில் வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பர்.

தங்களுக்குப் பிடித்த வீரர்களின் பெயர்களை உடலில் வர்ணமாக தீட்டிக் கொண்டும் பிடித்த அணிகளின் பெயர்களின் பதாகைகளை ஏந்திக் கொண்டும் ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள்.                                                          

ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துவதற்காகவே சிக்ஸர் மழையை சில வீரர்கள் பொழிவார்கள். மைதானத்தின் நாலாபுறமும் பந்து பறக்கம்.

இதுவரையிலான ஐபிஎல் கிரிக்கெட்டில் சிக்ஸர்களால் வாண வேடிக்கை காண்பித்து ரசிகர்களை திக்குமுக்காடச் செய்த டாப் 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.                                                 

கிறிஸ் கெயில்

இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பவர் கிறிஸ் கெயில். 2009ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளில் விளையாடியதன் மூலம் மொத்தம் 142 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 357 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார்.

அவர் மொத்தம் 4965 ரன்களையும் ஐபிஎல் கிரிக்கெட்டில் குவித்துள்ளார். ஓர் ஆட்டத்தில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 175 நாட் அவுட்.

6 சதங்கள், 31 அரை சதங்கள், 404 பவுண்டரிகளையும் அவர் விளாசியிருக்கிறார். இந்த லிஸ்ட்டில் கம்பீரமாக முதலிடத்தில் இருக்கிறார் கிறிஸ் கெயில்.

ஏபி டி வில்லியர்ஸ்

ஏபி டி வில்லியர்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.

மொத்தம் 184 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், 251 சிக்ஸர்களை பதிவு செய்துள்ளார்.

3 சதம், 40 அரை சதம் உள்பட மொத்தம் 5162 ரன்களை அடித்துள்ளார் ஏபி டி வில்லியர்ஸ்.

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!