திருப்போரூர் | ரூ.5 கோடியில் தயாராகும் தமிழகத்தின் முதல் மிதவை உணவக கப்பல்: கட்டுமானப் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

 

திருப்போரூர் | ரூ.5 கோடியில் தயாராகும் தமிழகத்தின் முதல் மிதவை உணவக கப்பல்: கட்டுமானப் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.   Robotics and 3d printing services

                                      

திருப்போரூர்: கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் ரூ.5 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட 2 அடுக்கு மிதக்கும் உணவக கப்பலின் கட்டுமான பணியை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார்.     

கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் படகு இல்லம் அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளுக்காக மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமாகச் செல்லும் இயந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படகு குழாமை மேம்படுத்தி மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது.                                                     

இதன்படி ரூ.5 கோடி மதிப்பில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் இரண்டு அடுக்குகளைக் கொண்ட பிரம்மாண்டமான மிதக்கும் உணவக கப்பல் கட்டப்படவுள்ளது. இத்திட்டம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் மூலமாக, தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் முதல் மிதவை உணவக கப்பல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், படகு இல்லம் வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் கப்பலின் கட்டுமான பணியை தொடங்கிவைத்தார்.

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!