இன்று முதல் தமிழகத்தில் அறிமுகம்... இனி கிராம ஊராட்சிகளில் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்!
இன்று முதல் தமிழகத்தில் அறிமுகம்... இனி கிராம ஊராட்சிகளில் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்! இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளிலும் ஆன்லைன் மூலமாக வீட்டு வரி செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டு, நடைமுறைக்கு வருகிறது. இது நாள் வரையில் கிராம ஊராட்சிகளில், ரசீது புத்தகம் வாயிலாக, ரொக்கமாக மட்டுமே வரி வசூல் நடந்து வந்தது. வளர்ச்சியடைந்த ஊராட்சிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் ரசீது வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரி வருவாயை, வங்கி கணக்கு வாயிலாக கையாள வசதியாக ஆன்லைன்' வரிவசூல் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் அனைத்திலும் படிப்படியாக காகிதமில்லா நடைமுறையை செயல்படுத்த முழுவதும் கணினிம யமாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசின் சேவைகள் மிக எளிதாக மக்களுக்கு கிடைக்க வகை செய்ய முடியும். அதே நேரத்தில் அவர்களின் தேவைகளும் எளிதாக பூர்த்தி செய்யப்பட்டு விடும். அரசு அலுவலங்களில் நடைபெறும் லஞ்சத்தைக் குறைப்பதற்கான வாய்ப்ப...