கரண்ட் பில் கட்டபோறீங்களா.. மின்சார வாரியம் சூப்பர் அறிவிப்பு.. கூடுதல் டெபாசிட் கட்டணமும் ரத்து
கரண்ட் பில் கட்டபோறீங்களா.. மின்சார வாரியம் சூப்பர் அறிவிப்பு.. கூடுதல் டெபாசிட் கட்டணமும் ரத்து !!!! சென்னை: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், கூடுதல் மின்நுகர்வுக்கான டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு மின்வாரியம் நிறுத்தி இருக்கிறது. ஏற்கனவே கூடுதல் கட்டணம் வசூலித்தவர்களுக்கு அடுத்த பில்லில் சரி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எல்லாரும் மின் இணைப்பு பெறும் பொழுது ஒரு டெபாசிட் தொகை கட்டியிருப்பார்கள்.. ஒவ்வொரு இணைப்புக்கும் சராசரியாக இவ்வளவு மின்சார பயன்பாடு ஒதுக்கீடு கணக்கு உண்டு. அந்த அளவை தாண்டும் பொழுது.. உங்களது இணைப்பின் பயன்பாடு வரம்பை உயர்த்தி அதற்கு ஏற்றார் போல டெபாசிட் தொகையின் பற்றாக்குறை தொகை வசூலிக்கப்படும். அதுதான் ACCD(Additional current consumption deposit) இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சரிபார்க்கப்பட்டு ஏப்ரல்/மே மாத மின் கட்டணத்துடன் வசூலிக்கப்படும். கூடுதலாக மின்சாரம் பய...