மூலப்பத்திரம்.. அதுவிடுங்க.. உயில் எழுதும்போது 5 விஷயம் முக்கியம்.. உயில் பத்திரம் பற்றி தெரியுமா?

 

மூலப்பத்திரம்.. அதுவிடுங்க.. உயில் எழுதும்போது 5 விஷயம் முக்கியம்.. உயில் பத்திரம் பற்றி தெரியுமா?     

சென்னை: பத்திரப்பதிவு, நிலம், வீடு, சொத்து விவகாரங்களில் அடிக்கடி பயன்படுத்தும் சொல் உயில்.. இதற்கான அர்த்தம் தெரியுமா?     

உயில் எழுத வேண்டுமானால் அதற்கான வழிமுறைகள் என்னென்ன தெரியுமா?      

ஒருவருக்குச் சொந்தமான சொத்தை, அவர் வாழ்நாளிலேயே தன் குடும்பத்தில் உள்ள மற்ற உறவினர்களுக்கு தருவதே செட்டில்மெண்ட் பத்திரம் என்பார்கள். ஆனால், ஒருவர் தன் சொத்துக்களை தன் வாழ்நாளுக்கு பிறகு, தன் உறவினர்களுக்குச் சேரும்படி எழுதி வைக்கும் பத்திரத்தை "உயில் பத்திரம்" என்கிறார்கள். அந்த வகையில் இரண்டிற்கும் வித்தியாசம் நிறைய உள்ளது.

செட்டில்மென்ட்டு பத்திரம்: தன்னுடைய சொத்துக்களை அவரது விருப்பத்தின் அடிப்படையில், வாரிசுகளுக்கு அவரது விருப்பப்படி, பிரித்து எழுதி வைக்கப்படுவதுதான் செட்டில்மென்டு பத்திரம் ஆகும்.    

ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துகளை, தனக்கு பிறகு இன்னொருவருக்கு எழுதி வைப்பதுதான் உயில்.. இது முழுக்க முழுக்க சுயநினைவுடன் எழுதுவதாகும்..

உயில்: உயில் எழுதியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாவிட்டாலும், அந்த சொத்துக்களால், பிற்காலத்தில், குடும்பத்தில் யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, முன்கூட்டியே எழுதி வைத்துவிடுவார்கள்.. இறந்தபோது எழுதிவைத்தது, அவரது மரணத்துக்கு பிறகு, உயிலாக கருதப்படும்.             

சொத்துக்கள் விஷயத்திற்காகவே, எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்துள்ளன.. ஒருவேளை சொத்தை எழுதி வைக்காமல், சம்பந்தப்பட்டவர் இறந்துவிட்டால், சொத்தை தங்களுக்கு பிரித்து கொள்வதிலும், எத்தனையோ வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.. இதுசம்பந்தமான கேஸ்களும், கோர்ட்களில் குவிய தொடங்கிவிடும். அப்படியே கேஸ் போட்டாலும், அவைகளிலெல்லாம் உடனடியாக தீர்வை காணமுடியாது. அதனால்தான், உயிருடன் இருக்கும்போதே, சுயநினைவுடன் சொத்தை பிரித்து எழுதி வைத்து விடுவார்கள்.     

பூர்வீக சொத்து: அதேபோல, ஒருவர் தனக்குரிய சொத்துக்களை மட்டுமே உயிலாக எழுத முடியும்.. அதாவது தான் சுயமாக சம்பாதித்ததை மட்டுமே உயிலாக எழுதி வைக்க முடியுமே தவிர, பூர்வீக சொத்தை யாருக்கும் உயிலாக எழுத முடியாது... சமமாகவும் பிரித்து வைத்து எழுதி வைக்க முடியாது.. வாரிசுகளுக்கு மட்டும்தான் உயிலை எழுதி வைக்க வேண்டும் என்றில்லை.. தனக்கு பிரியமானவர்கள் மற்றவர்களுக்கும் எழுதி வைக்கலாம். டிரஸ்ட்களுக்கும் எழுதி வைக்கலாம்..    

வாரிசு இருந்தும், அவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு எழுதி வைத்தால், வாரிசுகளால் அதை எதிர்க்கவே முடியாது. அதேபோல, வாரிசுகளுக்கு எழுதி வைக்கும்பட்சத்தில், அந்த சொத்து மனைவிக்கு கிடைக்கும் என்று அர்த்தம் கிடையாது.

வாரிசுதாரர்கள்: வேண்டுமானால், பிள்ளைகளுக்கு எழுதி வைக்கும்போது, மனைவியையும் ஒரு பங்குதாரராக சேர்த்து உயில் எழுதுவது நல்லது. வாரிசுதாரரையே நாமினியாக நியமித்துவிட்டால், சில சிக்கல்கள் எழாமல் தடுக்கப்பட்டுவிடும்.      

உயில் எழுதும்போது சில முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டும்.. ஒரு காகிதத்தில்கூட உயில் எழுதலாம். ஒருவர் தன்னுடைய பெயரில் உள்ள அசையும் பொருள்கள், அசையாத பொருள்கள் போன்றவைகளை ஒரு லிஸ்ட் எடுக்க வேண்டும்.

பிறகு எந்த சொத்தை, யாருக்கு, எவ்வளவு தருவது என்றும் தீவிரமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். இதில் 2 சாட்சி கையெழுத்துக்கள் முக்கியம். ஆனால், இப்படி கையெழுத்து போடுபவர்கள், உயிலுக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். உயிலில் டாக்டர் மற்றும் வக்கீல்களின் சாட்சி கையெழுத்து முக்கியம்.    

லிஸ்ட் : உயில் எழுதும்போது ஒரு காகிதத்தில்கூட உயில் எழுதலாம். பேனாவிலும் எழுதலாம். கம்ப்யூட்டரில் டைப் செய்து கொள்ளலாம்.. ஒருவர் தன்னுடைய பெயரில் உள்ள அசையும் பொருள்கள், அசையாத பொருள்கள் போன்றவைகளை ஒரு லிஸ்ட் எடுக்க வேண்டும். பிறகு எந்த சொத்தை, யாருக்கு, எவ்வளவு தருவது என்றும் தீவிரமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்.இதில் 2 சாட்சி கையெழுத்துக்கள் முக்கியம். ஆனால், இப்படி கையெழுத்து போடுபவர்கள், உயிலுக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.     

நீங்கள் ஒரு முறை எழுதிய உயிலை ரத்து செய்ய முடியும், திருத்தம் செய்யவும் முடியும்.. உயில் எழுதுவதற்கென முத்திரைத்தாள் எதுவும் தேவைப்படாது.. சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, பதிவு செய்துகொள்ளலாம்.. அரசு நிர்ணயம் செய்துள்ள பதிவு தொகையை மட்டும் செலுத்தி, பதிவு செய்துகொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!