டெபிட் கார்டு இல்லையா கவலை வேண்டாம்: செல்போன் மூலம் ஏடிஎம்-இல் பணம் எடுப்பது எப்படி?
டெபிட் கார்டு இல்லையா கவலை வேண்டாம்: செல்போன் மூலம் ஏடிஎம்-இல் பணம் எடுப்பது எப்படி?
இன்று நம்மில் பலர் யுபிஐ பேமெண்ட் வசதிகளை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். பெரிய கடைகள் முதல் சிறிய தள்ளுவண்டி கடைகள் வரை QR கோடை ஸ்கேன் செய்து யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி வந்து விட்டது.
அரசு அலுவலங்களில் கூட யுபிஐ பேமெண்ட் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. யுபிஐ பயன்பாடு காரணமாக பலரும் டெபிட் கார்டுகளையோ, கையில் பணமோ வைத்திருப்பதில்லை.
ஆனால், சில சமயங்களில் யுபிஐ வசதி இல்லாதபோது ஏடிஎம் மையங்களுக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது. அப்படிப்பட்ட தருணங்களில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் கையில் இல்லை என்றால் என்ன செய்வது. இனி கவலை வேண்டாம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் இல்லாமலேயே ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கலாம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்படி, Interoperable Cardless Cash Withdrawal (ICCW) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா வழங்கி வருகிறது. இந்த அம்சத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் யுபிஐ ஆப்களை பயன்படுத்தி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கலாம்.
அதன்படி, கார்டு இல்லாமல் செல்போனில் உள்ள யுபிஐ செயலியை பயன்படுத்தி QR கோட் மூலம் பணம் எடுக்கும் வசதிகளை சில வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. பயனர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் யுபிஐ சேவையை வழங்கும் ஆப்களை, அதாவது கூகுள் பே, போன்-பே போன்று; அல்லது உங்கள் வங்கியின் மொபைல் பேங்கிங் செயலி மூலம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-களில் பணம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்டு இல்லாமல் செல்போன் மூலம் ஏடிஎம்-இல் எப்படி பணம் எடுப்பது?

Comments
Post a Comment