மகேந்திரகிரி இஸ்ரோவில் ககன்யான் என்ஜின் சோதனை வெற்றி

 

மகேந்திரகிரி இஸ்ரோவில் ககன்யான் என்ஜின் சோதனை வெற்றி !!!    

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், ககன்யான் விண்கலத்தை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் ராக்கெட்டில் பொருத்துவதற்கான விகாஷ் என்ஜின் புதன்கிழமை பிற்பகலில் 670 விநாடிகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என இஸ்ரோ வட்டாரத்தில் தெரிவித்தனா்.    

மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யும் திட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 2007இம் ஆண்டில் உருவாக்கி, ரூ.10 ஆயிரம் கோடி செலவில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இத்திட்டத்திற்கு ககன்யான் என 2014இல் பெயரிடப்பட்டு, மூன்று விஞ்ஞானிகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லக்கூடிய விண்கலம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனா். விண்வெளி உடை, விண்வெளி பயணத்திற்கு பின்னா் விஞ்ஞானிகள் பத்திரமாக தரைஇறங்குவதற்கான பாராசூட் வடிவமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. விண்வெளிக்குச் செல்லும் விஞ்ஞானிகள் விண்வெளியில் 2 வாரங்கள் விண்கலத்தில் தங்கி இருந்து ஆராய்ச்சி மேற்கொள்வா்.  

விஞ்ஞானிகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் விண்கலம் பூமியில் இருந்து 470 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தை எடுத்துச் செல்ல ஜி.எஸ்.எல்.வி.எம்-3 ராக்கெட்டை பயன்படுத்தவும், ராக்கெட்டில் விகாஷ் என்ஜினை பொருத்தவும் திட்டமிடப்பட்டு, அதற்கான என்ஜின் சோதனை பல்வேறு கட்டங்களாக காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, புதன்கிழமை பிற்பகலில் விகாஷ் என்ஜினின் மற்றொரு சோதனை இஸ்ரோ மையத்தில் நடைபெற்றது. இஸ்ரோ தலைவா் சோம்நாத், இஸ்ரோ வளாக இயக்குநா் ஆசீா் பாக்கியராஜ், தொழில்நுட்ப பணியாளா்கள் முன்னிலையில் இந்தச் சோதனை 

தொடா்ந்து 670 விநாடிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததாக இஸ்ரோ வட்டாரத்தில் தெரிவித்தனா். இந்திய விண்வெளி 3 விஞ்ஞானிகளுடன் ஆராய்ச்சி விண்கலம் ஜி.எஸ்.எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் 2024-ல் விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக தெரிவித்த விஞ்ஞானிகள், விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டம் மூலம் உலக அரங்கில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியா முக்கிய இடத்தைப் பெறவுள்ளது என்றனா்.

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!