சென்னையில் இருந்து திருச்சி உள்பட சில மாவட்டங்களுக்கு மாதவரத்தில் இருந்து விரைவு பேருந்து சேவை தொடங்கியது!!!!
சென்னையில் இருந்து திருச்சி உள்பட சில மாவட்டங்களுக்கு மாதவரத்தில் இருந்து விரைவு பேருந்து சேவை தொடங்கியது.! சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சர்ச்சையைத் தொடர்ந்து, சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்த திருச்சி வரை சில மாவட்டங்களுக்கு விரைவு பேருந்து சேவை அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த பேருந்து சேவையை இன்று அமைச்சர் சிவசங்கர் மாதவரம் பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார். அதற்கான கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இயக்குவதில் சிக்கல்கள் நீடித்து வருகிறது. போதிய கழிப்பிடமோ, உணவகமோ, பேருந்து நடத்தும் இடமோ இல்லாத கிளாம்பாக்கத்தை அவசர அவசரமாகத் திறந்து மக்களை அலைக்கழிக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அந்த பேருந்து முனையத்திற்கு செல்லவே இரண்டு முதல் 3மணி நேரம் ஆவதுடன், பொதுமக்களின் பணமும் வீணாகிறது. மேலும், அங்கு செல்ல முறையான சென்னையில் பல பகுதிகளில் இருந்து முறையான பேருந்து வ...