சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரியை உருவாக்கிய சீன நிறுவனம்

 

சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரியை உருவாக்கிய சீன நிறுவனம்!!!!      

சீன Startup நிறுவனம் ஒன்று புதிய வகை பேட்டரியை தயாரிப்பதாக கூறியுள்ளது.     தங்கள் பேட்டரி 50 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், சாதாரண பேட்டரிகளைப் போல நிலையான சார்ஜிங் அல்லது பராமரிப்பு தேவைப்படாது என்றும் நிறுவனம் கூறுகிறது.     

63 அணுசக்தி ஐசோடோப்புகளை (nuclear isotopes) ஒரு நாணயத்தை விட சிறிய தொகுதியாக வைத்து, அணுசக்தியை miniaturisation செய்வதை உலகிலேயே முதன்முதலில் இந்த பேட்டரி தான் என்று சீனாவின் Betavolt நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அடுத்த தலைமுறை பேட்டரி ஏற்கனவே சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதியில் அவை தொலைபேசிகள் மற்றும் ட்ரோன்கள் போன்றவற்றில் வணிக பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.

விண்வெளி, AI உபகரணங்கள், மருத்துவ சாதனங்கள், நுண்செயலிகள், மேம்பட்ட சென்சார்கள், சிறிய ட்ரோன்கள் மற்றும் மைக்ரோ ரோபோக்கள் போன்ற பல விஷயங்களில் இந்த அணுசக்தி பேட்டரிகள் நீண்ட கால மின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.     

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!