National Science Day!. உலகமே வியந்த இந்தியாவின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் சிறப்பு தொகுப்பு
National Science Day!. உலகமே வியந்த இந்தியாவின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் சிறப்பு தொகுப்பு: National Science Day 2024: 1928 ஆம் ஆண்டு முதல் பி.ப்.,28ம் தேதியை நாம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறோம். இதைப் பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமெனில் முதலில் சர். சி.வி. ராமனின் கண்டுபிடிப்பை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்நாளை தேசிய அறிவியல் தினமாக மாற்றியது, அறிவியலின் திருப்புமுனையாக அமைந்த இவருடைய ‘ராமன் எஃபெக்ட்’ என்ற ஒளியைப் பற்றிய கண்டுபிடிப்பு தான். இவர் ஒரு சிறிய பரிசோதனையில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒளி ஒரு திரவத்தின் வழியாக செல்லும் பொழுது ஒளி சிதறல் நிகழ்கிறது. திரவத்தால் சிதறிய ஒளியின் ஒவ்வொரு பகுதியும் வேறு நிறத்தில் இருந்தது. இதை இவர் 1928 ல் கண்டறிந்தார். இந்த விளைவை கண்டறிந்ததை அறிவித்த பிறகு ஏழு ஆண்டுகளில் 700 ஆய்வு கட்டுரைகள் வெளியாகின. ராமன் எஃபெக்டை கண்டறிந்ததற்காக 1930 ல் இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், நோபல் பரிசு பெற்ற முதல் தமிழரும் இவர்தான். இதுமட்டுமல்லாமல், இவர் கண்டறிந்த ரா...