National Science Day!. உலகமே வியந்த இந்தியாவின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் சிறப்பு தொகுப்பு

 

National Science Day!. உலகமே வியந்த இந்தியாவின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் சிறப்பு தொகுப்பு:     

National Science Day 2024: 1928 ஆம் ஆண்டு முதல் பி.ப்.,28ம் தேதியை நாம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறோம்.  

இதைப் பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமெனில் முதலில் சர். சி.வி. ராமனின் கண்டுபிடிப்பை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்நாளை தேசிய அறிவியல் தினமாக மாற்றியது, அறிவியலின் திருப்புமுனையாக அமைந்த இவருடைய ‘ராமன் எஃபெக்ட்’ என்ற ஒளியைப் பற்றிய கண்டுபிடிப்பு தான். இவர் ஒரு சிறிய பரிசோதனையில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒளி ஒரு திரவத்தின் வழியாக செல்லும் பொழுது ஒளி சிதறல் நிகழ்கிறது. திரவத்தால் சிதறிய ஒளியின் ஒவ்வொரு பகுதியும் வேறு நிறத்தில் இருந்தது. இதை இவர் 1928 ல் கண்டறிந்தார். இந்த விளைவை கண்டறிந்ததை அறிவித்த பிறகு ஏழு ஆண்டுகளில் 700 ஆய்வு கட்டுரைகள் வெளியாகின.   

ராமன் எஃபெக்டை கண்டறிந்ததற்காக 1930 ல் இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், நோபல் பரிசு பெற்ற முதல் தமிழரும் இவர்தான். இதுமட்டுமல்லாமல், இவர் கண்டறிந்த ராமன் சிதறல், போட்டானின் உறுதியற்ற சிதறல் ஆகியவை இன்றளவும் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. 1986ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு தான் இந்த அறிவியல் தினத்தை அறிவித்தது.    

இன்றளவும் ராமன் விளைவைப் பயன்படுத்தாத அறிவியல் துறைகளே இல்லை என கூறலாம். அந்த அளவுக்கு இயற்பியல், உயிரியல், வேதியியல், மருந்தியல், புவியியல், அகழ்வாராய்ச்சி தொடங்கி, தடயவியல், அழகு சாதனவியல் என ராமன் விளைவின் பயன்பாடுகள் பரந்து விரிந்து கிடக்கிறது. இப்படி அறிவியலில் இந்தியா பல மகத்தான சாதனைகளை படைக்க ஊந்துகோளாக இருந்துள்ளார் ராமன். இந்த நிலையில், அறிவியலில் இந்தியா நிகழ்த்திய சாதனைகள் பற்றி பார்க்கலாம்.      இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உருவாக்கிய முதல் செயற்கைக்கோள் தான் ஆர்யபட்டா. முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் கடந்த 1975-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 1980-களில் ஏவுகணை உருவாக்க தொடங்கிய இந்தியா, கடந்த 1989-ம் ஆண்டு அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்தது. இதையடுத்து கண்டுபிடிக்கப்பட்ட ஏவுகணைகளுக்கு அக்னி வரிசையில் பெயரிடப்பட்டு உள்ளது.     

இந்தியாவில் டிஎன்ஏ கைரேகை கடந்த 1988-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலில் உள்ள விஞ்ஞானிகள் இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். உலகிலேயே டிஎன்ஏ கைரேகையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த மூன்றாவது நாடு இந்தியா. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் இந்தியா கடந்த 1998-ம் ஆண்டு மே 11ந் தேதி ஐந்து அணுகுண்டுகளை நிலத்தடியில் வெற்றிகரமாக சோதனை செய்தது. இதையடுத்து இந்த சோதனைக்கு பொக்ரான் 2 என பெயரிட்டனர்.    

நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக இஸ்ரோ உருவாக்கிய விண்கலம் தான் சந்திரயான். இதுவரை 3 சந்திரயான் விண்கலங்கள் ஏவப்பட்டு உள்ளன. இதில் கடந்த ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு சாதனை படைத்தது. சந்திரயான் நிலவை ஆய்வு செய்வது போல் சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா உருவாக்கிய விண்கலம் தான் ஆதித்யா. சமீபத்தில் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டு சூரியனில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.  

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!