ஒரே ஆளா வந்து 2000 கார்களை வாங்கிட்டு போயிட்டாங்க !!!
இந்தியாவின் மின்சார பயணிகள் வாகன பிரிவில் நம்பர் 1 பிராண்டாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) உள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் நெக்ஸான்.இவி (Nexon.ev), டிகோர்.இவி (Tigor.ev), டியாகோ.இவி (Tiago.ev) மற்றும் பஞ்ச்.இவி (Punch.ev) உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இத்துடன் எக்ஸ்பிரஸ்-டி இவி (XPRES-T EV) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது பலர் அறியாத எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். ஏனெனில் டாடா மோட்டார்ஸ் இந்த எலெக்ட்ரிக் கார் மாடலை டி-போர்டு பிரிவில் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதாவது, தனி நபர் பயன்பாட்டிற்கு இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிக் கொள்ள முடியாது. அதேவேளையில், பெரு நிறுவனங்கள் அல்லது வாடகை வாகன சேவை இதுபோன்ற பொது பயன்பாட்டிற்காக மட்டுமே இந்த காரை வாங்கிக் கொள்ள முடியும். இதனால்தான் இந்த கார் மாடல் அந்த அளவிற்கு தனி நபர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை. அதேவேளையில் கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் வாடகை வாகன சேவை நிறுவனங்கள் மத்தியில் புகழ்பெற்ற கார் மாடலாக எக்ஸ்பிரஸ்...