ஒரே ஆளா வந்து 2000 கார்களை வாங்கிட்டு போயிட்டாங்க !!!

 

இந்தியாவின் மின்சார பயணிகள் வாகன பிரிவில் நம்பர் 1 பிராண்டாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) உள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் நெக்ஸான்.இவி (Nexon.ev), டிகோர்.இவி (Tigor.ev), டியாகோ.இவி (Tiago.ev) மற்றும் பஞ்ச்.இவி (Punch.ev) உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.       

இத்துடன் எக்ஸ்பிரஸ்-டி இவி (XPRES-T EV) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது பலர் அறியாத எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். ஏனெனில் டாடா மோட்டார்ஸ் இந்த எலெக்ட்ரிக் கார் மாடலை டி-போர்டு பிரிவில் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.    

அதாவது, தனி நபர் பயன்பாட்டிற்கு இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிக் கொள்ள முடியாது. அதேவேளையில், பெரு நிறுவனங்கள் அல்லது வாடகை வாகன சேவை இதுபோன்ற பொது பயன்பாட்டிற்காக மட்டுமே இந்த காரை வாங்கிக் கொள்ள முடியும். இதனால்தான் இந்த கார் மாடல் அந்த அளவிற்கு தனி நபர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை.

அதேவேளையில் கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் வாடகை வாகன சேவை நிறுவனங்கள் மத்தியில் புகழ்பெற்ற கார் மாடலாக எக்ஸ்பிரஸ் டி காட்சியளிக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த கார் மாடலின் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் 2 ஆயிரம் யூனிட்டுகளுக்கு ஆர்டர் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.     

வெர்டிலோ (Vertelo) எனும் ஒற்றை நிறுவனமே இவ்ளோ பெரிய ஆர்டரை வழங்கி இருக்கின்றது. இது ஓர் வாடகை வாகன சேவை நிறுவனம். இந்த நிறுவனம் தன்னுடைய வாடகை வாகன சேவையில் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் அடிப்படையிலேயே மிகப் பெரிய ஆர்டரை அது வழங்கி இருக்கின்றது.    

இந்த ஆர்டரின் ஒட்டுமொத்த மதிப்பு பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதேவேளையில், மிகப் பெரிய கொள்முதலைத் தொடர்ந்து பிணைக்கப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் இரு நிறுவனங்களும் செய்திருக்கின்றன. இதன் வாயிலாக குறிப்பிட்ட சில சப்போர்ட்களை வெர்டெலோவிற்கு டாடா மோட்டார்ஸ் வழங்க இருக்கின்றது. இது ஓர் மிகப் பெரிய ஆர்டர் ஆகும்.  

ஆகையால் ஒவ்வொரு கட்டமாக எலெக்ட்ரிக் கார்கள் வெர்டெலோவிற்கு வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கின்றது. டாடா எக்ஸ்பிரஸ்-டி இவி ஓர் செடான் வகை எலெக்ட்ரிக் கார் மாடலாகும். இந்த கார் மாடலுக்கு வாடகை வாகன சேவை பிரிவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.  

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!