கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.
கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க ரயில்வே வாரியம் ஓப்புதல். ஏ.சி புறநகர் இரயில் கும்மிடிப்பூண்டி தடத்தில், கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே, 365.42 கோடி ரூபாயில், மூன்று, நான்காவது ரயில் பாதைகள் அமைக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், மின்சார ரயில்கள் தாமதம் குறையும்; இரட்டிப்பு சேவை வழங்க முடியும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சென்னையில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம் வழித்தடங்களில் மின்சார ரயில்களை இயக்க, பிரத்யேக ரயில் பாதைகள் உள்ளன. செங்கல்பட்டு வரை மூன்று ரயில் பாதைகளும், அரக்கோணம் வரை நான்கு ரயில் பாதைகளும் இருப்பதால், விரைவு மற்றும் மின்சார ரயில்கள் பெரிதாக தாமதமின்றி இயக்கப்படுகின்றன. ஆனால், சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி தடத்தில் இரண்டு ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இந்த பாதை வழியாக மின்சார, விரைவு, சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவு, சரக்கு ரயில்கள் செல்லும்போதெல்லாம், மின்சார ரயில்கள் ஓரங்கட்டி நிற...
Comments
Post a Comment