மூலப்பத்திரம்.. அதுவிடுங்க.. உயில் எழுதும்போது 5 விஷயம் முக்கியம்.. உயில் பத்திரம் பற்றி தெரியுமா?
மூலப்பத்திரம்.. அதுவிடுங்க.. உயில் எழுதும்போது 5 விஷயம் முக்கியம்.. உயில் பத்திரம் பற்றி தெரியுமா? சென்னை: பத்திரப்பதிவு, நிலம், வீடு, சொத்து விவகாரங்களில் அடிக்கடி பயன்படுத்தும் சொல் உயில்.. இதற்கான அர்த்தம் தெரியுமா? உயில் எழுத வேண்டுமானால் அதற்கான வழிமுறைகள் என்னென்ன தெரியுமா? ஒருவருக்குச் சொந்தமான சொத்தை, அவர் வாழ்நாளிலேயே தன் குடும்பத்தில் உள்ள மற்ற உறவினர்களுக்கு தருவதே செட்டில்மெண்ட் பத்திரம் என்பார்கள். ஆனால், ஒருவர் தன் சொத்துக்களை தன் வாழ்நாளுக்கு பிறகு, தன் உறவினர்களுக்குச் சேரும்படி எழுதி வைக்கும் பத்திரத்தை "உயில் பத்திரம்" என்கிறார்கள். அந்த வகையில் இரண்டிற்கும் வித்தியாசம் நிறைய உள்ளது. செட்டில்மென்ட்டு பத்திரம்: தன்னுடைய சொத்துக்களை அவரது விருப்பத்தின் அடிப்படையில், வாரிசுகளுக்கு அவரது விருப்பப்படி, பிரித்து எழுதி வைக்கப்படுவதுதான் செட்டில்மென்டு பத்திரம் ஆகும். ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துகளை, தனக்கு பிறகு இன்னொருவருக்கு எழுதி வைப்பதுதான் உயில்.. இது முழுக்க முழுக்க சுயநினைவுடன...