சென்னை சென்ட்ரலில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ரயில் உணவகம் - பயணிகள் வரவேற்பு!

 

சென்னை சென்ட்ரலில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ரயில் உணவகம் - பயணிகள் வரவேற்பு!!!!!     

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பல்வேறு ஹோட்டல்கள் இருந்தாலும், தற்போது பலரின் கவனத்தையும் ஈர்ப்பது புதிதாக திறக்கப்பட்டுள்ள ரயில் உணவகம்தான்.     


ரயில் பெட்டி போலவே அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில், குளிர்சாதன வசதியுடன் குறைந்த விலையில் உணவுகள் விற்கப்படுகின்றன. இங்கு ஒருநேரத்தில் சுமாா் 40 பேர்  உணவகத்தின் கீழ்தளத்தில் அமா்ந்தும், 110 பேர்  வரை உணவகத்தின் வெளியே இருந்தும், 26 பேர்  உணவகத்தின் மேல்தளத்தில் அமா்ந்தும் உணவு உண்ணலாமென சொல்லப்படுகிறது.


காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் இந்த ஹோட்டலை சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் நேற்று திறந்து வைத்துள்ளார். தண்டவாளத்தில் நிற்பது போன்று இரண்டு ரயில் பெட்டிகளில் இந்த உணவகம் செயல்படுகிறது. ரயில் இருக்கைகள் போன்றே இங்கும் இருக்கைகள் உள்ளன.   சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வெளியே, அமர்ந்து தேநீர் குடிப்பதற்கு இதுவரை எந்த இடமும் இல்லாத நிலையில் ரயில் நிலையம் அருகிலேயே இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளதற்கு பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!