தம்மாத்துண்டு Ringல இவ்ளோ டெக்னாலஜியா? வயர்லெஸ் சார்ஜிங்.. ஹெல்த் மானிட்டர் வேற.. எந்த மாடல்?

 

தம்மாத்துண்டு Ringல இவ்ளோ டெக்னாலஜியா? வயர்லெஸ் சார்ஜிங்.. ஹெல்த் மானிட்டர் வேற.. எந்த மாடல்?  

ஒரு விரலில் மாட்டும் மோதிரத்தில் 24 மணி நேர ஹார்ட் ரேட், பிளட் ஆக்ஸிஜன் லெவல் உள்ளிட்ட 6 ஹெல்த் மானிட்டர்கள், மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பிரம்மாண்ட அம்சங்கள் வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?    

போட் ஸ்மார்ட் ரிங் அம்சங்கள் (boAt Smart Ring Specification): இந்த ஸ்மார்ட் ரிங்கில் ஆக்டிவிட்டி டிராக்கிங் (Smart Activity Tracking) வருகிறது. இதன் மூலம், உங்களது பிசிகல் ஆக்டிவிட்டிகளான வாக்கிங், ரன்னிங், ரைடிங், டான்ஸ் போன்றவற்றை டிராக் செய்து, கலோரிகள் பர்னிங்கை (Calories Burning) கணக்கீடு செய்துகொள்ள முடியும்.   

இந்த போட் ரிங்கில் மொத்தமாக 5 ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) வருகின்றன. அந்த வகையில், ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பாடி டெம்பரேச்சர் மானிட்டர் (Body Temperature Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), மென்சுரல் டிராக்கிங் மானிட்டர் (Menstrual Tracking Monitor) மற்றும் பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் (Blood Oxygen Levels Monitor) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.      

இதன் ஹெல்த் மானிட்டர்கள் மூலம் 24 மணி நேர ஹார்ட் ரேட் அனாலிசிஸ் (Heart Rate Analysis), பீவர் டெம்பரேச்சர் அலர்ட் (Fever Temperature Alert), பிளட் ஆக்ஸிஜன் லெவல் இன்சைட்ஸ் (Blood Oxygen Level Insights), டீப் ஸ்லீப் (Deep Sleep) மற்றும் லைட் ஸ்லீப் (Light Sleep) வேரியேஷன், மென்சுரல் டேட் நோட்டிபிகேஷன் (Menstrual Date Notifications) போன்றவற்றை கவனித்துக் கொள்ள முடியும்.         

அதுமட்டுமல்லாமல், பாடி ரிக்கவரி டிராக்கிங் (Body Recovery Tracking) கொடுக்கப்பட்டுள்ளது. இது உங்களது உடல்நிலையை சீராக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும். இந்த ரிங்கில் ஸ்மார்ட் டச் கன்ட்ரோல் (Smart Toch Control) சென்சார் இருக்கிறது. இதன் மூலம் மியூசிக் கன்ட்ரோல் (Music Control) மற்றும் கேமரா கன்ட்ரோல் (Camera Control) செய்து கொள்ள முடியும்.      

அதாவது, இந்த ரிங்கை ரிமோட் போல பயன்படுத்தி உங்களது ஸ்மார்ட்போனில் பாடல்கள் கேட்கும்போது பிளே/பாஸ் (Play/Pause) மற்றும் சேஞ்ஜிங் டிராக்ஸ் (Change Tracks) செய்துகொள்ள முடியும். அதேபோல கேமராவில் போட்டோ எடுக்கும்போது கிளிக் பிக்சர்ஸ் (Click Pictures) செய்துகொள்ளலாம். இதை நீங்கள், சிங்கிள் ஹேண்ட் மூவ்மெண்ட்ஸ் (Single Hand Movements) மூலம் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம்.     

இந்த போட் ரிங்கில் ஸ்மார்ட் வயர்லெஸ் சார்ஜிங் (Smart Wireless Charging) சப்போர்ட் வருகிறது. இந்த ரிங்கை ஃபுல் சார்ஜ் செய்தால், 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும். இந்த ரிங்கின் டேட்டாக்களை போட் ரிங் ஆப் (boAt Ring App) மூலம் சேமித்துக்கொள்ளலாம்.

இந்த போட் ரிங்கில் 5 ஏஎம்டி (AMT) வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு எஸ்ஓஎஸ் (SOS) மோஷன் சென்சிங் சப்போர்ட் வருகிறது. இந்த சென்சிங் மூலம் உங்களது ஹார்ட் ரேட் ஆபத்தான நிலைக்கு செல்லும்போதும், பாடியில் மூவ்மெண்ட் இல்லாத போதும் ஸ்மார்ட்போனுக்கு அலர்ட் அனுப்பப்படும்.    

அதுமட்டுமல்லாமல், ஆக்ஸிஸ் மோஷன் சென்சார்கள் (Axis Motion Sensors) வருகின்றன. இந்த போட் ரிங்கின் டிசைனை பொறுத்தவரையில், பிரீமியம் மெட்டல் (Metal) பாடியில் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு செராமிக் (Ceramic) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போட் ரிங்கை 7, 9 மற்றும் 11 ஆகிய விரல் அளவுகளில் வாங்கிக்கொள்ள முடியும்.

இந்த ரிங் அமேசானில் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போட் (boAt) தளத்தில் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ. 8,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அறிமுக சலுகை வழங்கப்பட வாய்ப்புள்ளது. ஸ்மார்ட்வாட்ச்க்கு நிகரான அம்சங்களை கொண்டிருப்பதால் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!