மார்கெட் காலி.. வெறும் ரூ.10,000 பட்ஜெட்ல 16GB ரேம்.. 45W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. எந்த போன்?

 

மார்கெட் காலி.. வெறும் ரூ.10,000 பட்ஜெட்ல 16GB ரேம்.. 45W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. எந்த போன்?       

பிளிப்கார்ட் விற்பனையில் மிரளும் டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.10000 பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 45W சார்ஜிங், 6000mAh பேட்டரி போன்ற மூக்கில் விரல் வைக்கும்படியான அம்சங்களுடன் டெக்னோ போவா 5 (TECNO POVA 5) விற்பனை  செய்யப்படுகிறது. 

   

டெக்னோ போவா 5 அம்சங்கள் (TECNO POVA 5 Specifications): இந்த டெக்னோ போவா மாடல் டர்போ மெக்கா டிசைன் (TURBO MECHA DESIGN) கொண்ட பேக் பேனல் கொண்டுள்ளது. அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு எல்சிடி டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டெக்னோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் வருகிறது. அதோடு ஹாய்ஓஎஸ் 13 (HiOS 13) மற்றும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 (Arm Mali-G57 MC2) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.     

இந்த டெக்னோ போவா போனில் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு ஏஐ செகண்டரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் டூயல் (Dual Video), ஸ்கை ஷாப் (Sky Shop) போன்ற மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த போனில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு 1 ஜிபிக்கான மைக்ரோ எஸ்டி சப்போர்ட் கொண்டுள்ளது. வெறும் ரூ.10000 பட்ஜெட்டில் அதிகப்படியான ரேம் மற்றும் மெமரி சப்போர்ட் கிடைக்கும் போன்களில் இந்த மாடல் முன்னணியில் இருக்கிறது.     

இந்த டெக்னோ போவா மாடலில் பேட்டரி தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க எஸ்டிஎஸ் பேட்டரி டெக்னாலஜி (STS BATTERY TECHNOLOGY) பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு டைப்-சி (Type-C) சார்ஜிங் போர்ட் வருகிறது. அதோடு சூப்பர் பவர் சேவிங் மோட் கொண்டிருக்கிறது.

இந்த டெக்னோ போவா 5 மாடலில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டுள்ளது. அதோடு 3.5 எம்எம் இயர்போன் ஜாக் (3.5mm Earphone Jack) வருகிறது.       

இந்த போவா போனில் மெக்கா பிளாக் (Mecha Black), அம்பர் கோல்டு (Amber Gold) மற்றும் ஹரிக்கேன் ப்ளூ (Hurricane Blue) ஆகிய மூன்று கலர்கள் விற்பைனைக்கு வருகின்றன. இதுவொரு 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5 (Bluetooth 5), ஜிபிஎஸ் (GPS), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் என்எஃப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டி வருகிறது.

இந்த டெக்னோ போவா மாடலின் 8 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.11,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மிட்-ரேஞ்ச் அம்சங்களுடன் மலிவான விலையில் விற்பனைக்கு வந்ததால், மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இந்த விற்பனையை மேலும் சூடு பிடிக்க வைக்கும் விதமாக பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் அதிரடி டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.      

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!