அட்டைப்பெட்டிக்கு பதிலாக ஊழியரை பிடித்து நசுக்கிய ரோபோ.. அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள்..!!

அட்டைப்பெட்டிக்கு பதிலாக ஊழியரை பிடித்து நசுக்கிய ரோபோ.. அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள்..!!

   

பெட்டி என நினைத்து வேலை செய்யும் ஊழியரை ரோபோ எடுத்து பெட்டிக்குள் வைத்த சம்பவம் பெரும். அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   தென்கொரீயாவில் உள்ள தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாய விளைபொருள் விநியோக மையத்தில் காய்கறிப் பெட்டிகளை எடுத்து சீல் செய்யும் பணிக்கு ரோபோக்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரோபோவின் சென்சார் செயல்பாடுகளை அங்கு உள்ள ஊழியர் ஒருவர் ஆய்வு செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. நிறுவன ஊழியரை காய்கறிப் பெட்டி என நினைத்து தூக்கி கன்வேயர் பெல்ட்டில் வைத்திருக்கிறது.      ரோபோவின் இறுக்கமான பிடியிலிருந்து அந்த ஊழியர் தப்ப முடியாமல் திணறியுள்ளார். கன்வேயர் பெல்ட் உள்ளே சென்ற அந்த ஊழியரின் முகம் மற்றும் மார்பு பகுதி நசுக்கப்பட்டது. படுகாயமடைந்த நிலையில் அந்த ஊழியரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.   ரோபோவிடம் சிக்கி பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக மே மாத தொடக்கத்தில் தென் கொரியாவில் ஒரு ரோபோ ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையில் ரோபோவிடம் சிக்கி அங்கு வேலை செய்த ஊழியர் காயமடைந்தார். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் இன்டஸ்ட்ரியல் மெடிசின் வெளியிட்ட ஆய்வின்படி, 1992 முதல் 2017 வரை அமெரிக்காவில் தொழில்துறை ரோபோக்களால் 41 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!