Kilambakkam Bus Stand: ஹாப்பி! ரூ.40 இருந்தால் போதும் சென்னையில் எங்கும் பயணிக்கலாம்! கிளாம்பாக்கத்தில் புதிய சேவை!

 

Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.  கிளாம்பாக்கத்தில் புதிய சேவை:  

இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், 'டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுக்கிணங்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , இன்று (29.02.2024)  தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40/- கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.   

Comments

Popular posts from this blog

Application of 3D printing in Education Sector

திருமண உதவித்தொகை ரூ.20,000 கிடையாது, 50 ஆயிரம் தான்.! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.!

பெட்ரோலும் தேவையில்லை, சார்ஜூம் போட வேணாம்! மார்கெட்டையே அடித்து நொறுக்கப்போகும் புதிய எம்ஜி எம்பிவி கார்!