புதிய வகை 'சலுான்' பெட்டிகள் தயாரிக்க ரயில்வே திட்டம்!!!

புதிய வகை 'சலுான்' பெட்டிகள் தயாரிக்க ரயில்வே திட்டம்!!!!     


 சென்னை: வரும் நிதி ஆண்டில், வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்யும் வகையில், புதுவகையான, 100 சொகுசு 'சலுான்' பெட்டிகளை தயாரிக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது.நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர், முதல்வர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் செல்வதற்காக, சலுான் என்ற சொகுசு வசதிகள் உடைய, தனிப் பெட்டியை ரயில்வே உருவாக்கி உள்ளது.விரைவு ரயிலில் முன் அல்லது பின் பகுதியில், இந்த பெட்டி இணைத்து இயக்கப்படும்.  For best quality 3d printing services in Chennai இந்த சலுான் பெட்டி என்பது 'நகரும் வீடு' போல இருக்கும். நட்சத்திர ஹோட்டலில் உள்ளது போல, குளியலறை வசதியுடன் கூடிய, இரண்டு படுக்கை அறைகள், ஹால், உணவு பரிமாறும் அறை, சோபா, சமையல் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற்று இருக்கும்.இந்த சொகுசு வசதி பெட்டிக்கு, 2 லட்சம் ரூபாய் வரை கட்டணம் இருக்கும். All time favorite gift!!! The personalized moon lamp இந்நிலையில், 2023 -24ம் நிதி ஆண்டில், வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்யும் வகையில் 100 புதுவகையான சலுான் பெட்டிகளை தயாரிக்க, ரயில்வே திட்டமிட்டு உள்ளது.ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயிலில் வி.ஐ.பி.,க்கள் பயணம் செய்யும் சலுான் வகை சொகுசு பெட்டிகள் தயாரிப்பு, சில ஆண்டுகளாக பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. தற்போது, இந்த வகை பெட்டிகளின் தேவை கூடியுள்ளது. For Robotics, 3D printing Training and classes                                                                                              

அரசு உயர் பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமின்றி, தொழில் அதிபர்கள் உள்ளிட்டோரும் பயன்படுத்த துவங்கி விட்டனர். எனவே, இந்த வகை பெட்டிகளின் தயாரிப்பை, இந்த நிதி ஆண்டில் ரயில்வே அதிகரித்துள்ளது. For your children bright future learn robotics with simple kit அதன்படி, வரும் நிதி ஆண்டில் மொத்தம், 100 பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இதில், சென்னை ஐ.சி.எப்., ஆலையில் - 50, கபூர்தலா ஆர்.சி.எப்., ஆலையில் - 50 பெட்டிகளும் தயாரிக்கப்பட உள்ளன. ஏற்கனவே உள்ள சலுான் பெட்டிகளை விட, கூடுதல் சொகுசு வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.Best laptop for school and college students The amazon link இதற்கான புது வடிவமைப்புக்கு, வாரிய ஒப்புதல் கிடைத்தவுடன், புதுவகை சலுான் பெட்டிகளை தயாரிக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!