மகேந்திரகிரி இஸ்ரோவில் ககன்யான் என்ஜின் சோதனை வெற்றி !!! திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், ககன்யான் விண்கலத்தை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் ராக்கெட்டில் பொருத்துவதற்கான விகாஷ் என்ஜின் புதன்கிழமை பிற்பகலில் 670 விநாடிகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என இஸ்ரோ வட்டாரத்தில் தெரிவித்தனா். மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யும் திட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 2007இம் ஆண்டில் உருவாக்கி, ரூ.10 ஆயிரம் கோடி செலவில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இத்திட்டத்திற்கு ககன்யான் என 2014இல் பெயரிடப்பட்டு, மூன்று விஞ்ஞானிகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லக்கூடிய விண்கலம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனா். விண்வெளி உடை, விண்வெளி பயணத்திற்கு பின்னா் விஞ்ஞானிகள் பத்திரமாக தரைஇறங்குவதற்கான பாராசூட் வடிவமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. விண்வெளிக்குச் செல்லும் விஞ்ஞானிகள் விண்வெளியில் 2 வாரங்கள் விண்கலத்தில் தங்கி இருந்து ஆராய்ச்சி மேற்கொள்வா். விஞ்ஞானிகளை விண்வெளிக்கு எடுத்...
Comments
Post a Comment