Posts

Showing posts from August, 2023

சென்னை சென்ட்ரலில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ரயில் உணவகம் - பயணிகள் வரவேற்பு!

Image
  சென்னை சென்ட்ரலில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ரயில் உணவகம் - பயணிகள் வரவேற்பு!!!!!      சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பல்வேறு ஹோட்டல்கள் இருந்தாலும், தற்போது பலரின் கவனத்தையும் ஈர்ப்பது புதிதாக திறக்கப்பட்டுள்ள ரயில் உணவகம்தான்.      ரயில் பெட்டி போலவே அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில், குளிர்சாதன வசதியுடன் குறைந்த விலையில் உணவுகள் விற்கப்படுகின்றன. இங்கு ஒருநேரத்தில் சுமாா் 40 பேர்  உணவகத்தின் கீழ்தளத்தில் அமா்ந்தும், 110 பேர்  வரை உணவகத்தின் வெளியே இருந்தும், 26 பேர்  உணவகத்தின் மேல்தளத்தில் அமா்ந்தும் உணவு உண்ணலாமென சொல்லப்படுகிறது. காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் இந்த ஹோட்டலை சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் நேற்று திறந்து வைத்துள்ளார். தண்டவாளத்தில் நிற்பது போன்று இரண்டு ரயில் பெட்டிகளில் இந்த உணவகம் செயல்படுகிறது. ரயில் இருக்கைகள் போன்றே இங்கும் இருக்கைகள் உள்ளன.   சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வெளியே, அமர்ந்து தேநீர் குடிப்பதற்கு இதுவரை எந்த இடமும் இல...

தம்மாத்துண்டு Ringல இவ்ளோ டெக்னாலஜியா? வயர்லெஸ் சார்ஜிங்.. ஹெல்த் மானிட்டர் வேற.. எந்த மாடல்?

Image
  தம்மாத்துண்டு Ringல இவ்ளோ டெக்னாலஜியா? வயர்லெஸ் சார்ஜிங்.. ஹெல்த் மானிட்டர் வேற.. எந்த மாடல்?   ஒரு விரலில் மாட்டும் மோதிரத்தில் 24 மணி நேர ஹார்ட் ரேட், பிளட் ஆக்ஸிஜன் லெவல் உள்ளிட்ட 6 ஹெல்த் மானிட்டர்கள், மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பிரம்மாண்ட அம்சங்கள் வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?     போட் ஸ்மார்ட் ரிங் அம்சங்கள் (boAt Smart Ring Specification): இந்த ஸ்மார்ட் ரிங்கில் ஆக்டிவிட்டி டிராக்கிங் (Smart Activity Tracking) வருகிறது. இதன் மூலம், உங்களது பிசிகல் ஆக்டிவிட்டிகளான வாக்கிங், ரன்னிங், ரைடிங், டான்ஸ் போன்றவற்றை டிராக் செய்து, கலோரிகள் பர்னிங்கை (Calories Burning) கணக்கீடு செய்துகொள்ள முடியும்.    இந்த போட் ரிங்கில் மொத்தமாக 5 ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) வருகின்றன. அந்த வகையில், ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பாடி டெம்பரேச்சர் மானிட்டர் (Body Temperature Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), மென்சுரல் டிராக்கிங் மானிட்டர் (Menstrual Tracking Monitor) மற்றும் பிளட் ஆக்ஸிஜ...

இது தெரியுமா ? இந்தியாவின் முதல் 3-டி தபால் அலுவலகம் பெங்களூருவில் திறப்பு..!

Image
  இது தெரியுமா ? இந்தியாவின் முதல் 3-டி தபால் அலுவலகம் பெங்களூருவில் திறப்பு..!!!!!!      கட்டுமான தொழில்நுட்பத்தின் புதிய புரட்சியாக 3டி பிரிண்டிங் முறை அறிமுகமாகி வருகிறது. இந்தியாவின் முதல் 3டி பிரின்டிங் வீடு, சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் திறந்து வைக்கப்பட்டது.         ராணுவ கட்டுமானங்களுக்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சியின் அடிப்படையில் கவுஹாத்தி ஐஐடி மூலம் ராணுவ நிலை அலுவலகங்கள் கடந்த ஆண்டு கட்டப்பட்டன. தெலங்கானாவின் சித்திபெட் பகுதியில் 3,800 சதுர அடி பரப்பளவில் கோவில் ஒன்று 3டி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கட்டப்பட்டு வருகிறது.       இதன் தொடர்ச்சியாக, 3டி பிரின்டிங் முறையில் கட்டப்பட்ட முதல் தபால் நிலையம் பெங்களூருவில் நேற்று திறக்கப்பட்டது. பெங்களூருவின் உல்சூர் பசார் அருகே உள்ள கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் கட்டப்பட்டுள்ள இந்த தபால் நிலையத்தை மத்திய ரயில்வே, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழ...

மகேந்திரகிரி இஸ்ரோவில் ககன்யான் என்ஜின் சோதனை வெற்றி

Image
  மகேந்திரகிரி இஸ்ரோவில் ககன்யான் என்ஜின் சோதனை வெற்றி !!!     திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், ககன்யான் விண்கலத்தை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் ராக்கெட்டில் பொருத்துவதற்கான விகாஷ் என்ஜின் புதன்கிழமை பிற்பகலில் 670 விநாடிகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என இஸ்ரோ வட்டாரத்தில் தெரிவித்தனா்.     மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யும் திட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 2007இம் ஆண்டில் உருவாக்கி, ரூ.10 ஆயிரம் கோடி செலவில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இத்திட்டத்திற்கு ககன்யான் என 2014இல் பெயரிடப்பட்டு, மூன்று விஞ்ஞானிகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லக்கூடிய விண்கலம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனா். விண்வெளி உடை, விண்வெளி பயணத்திற்கு பின்னா் விஞ்ஞானிகள் பத்திரமாக தரைஇறங்குவதற்கான பாராசூட் வடிவமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. விண்வெளிக்குச் செல்லும் விஞ்ஞானிகள் விண்வெளியில் 2 வாரங்கள் விண்கலத்தில் தங்கி இருந்து ஆராய்ச்சி மேற்கொள்வா்.   விஞ்ஞானிகளை விண்வெளிக்கு எடுத்...