Posts

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்.

Image
  கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க ரயில்வே வாரியம் ஓப்புதல். ஏ.சி புறநகர் இரயில் கும்மிடிப்பூண்டி தடத்தில், கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே, 365.42 கோடி ரூபாயில், மூன்று, நான்காவது ரயில் பாதைகள் அமைக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், மின்சார ரயில்கள் தாமதம் குறையும்; இரட்டிப்பு சேவை வழங்க முடியும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.                சென்னையில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம் வழித்தடங்களில் மின்சார ரயில்களை இயக்க, பிரத்யேக ரயில் பாதைகள் உள்ளன. செங்கல்பட்டு வரை மூன்று ரயில் பாதைகளும், அரக்கோணம் வரை நான்கு ரயில் பாதைகளும் இருப்பதால், விரைவு மற்றும் மின்சார ரயில்கள் பெரிதாக தாமதமின்றி இயக்கப்படுகின்றன.    ஆனால், சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி தடத்தில் இரண்டு ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இந்த பாதை வழியாக மின்சார, விரைவு, சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவு, சரக்கு ரயில்கள் செல்லும்போதெல்லாம், மின்சார ரயில்கள் ஓரங்கட்டி நிற...

3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!

Image
 3 கோடி அபேஸ்.. வாடிக்கையாளர் கணக்கில் இருந்த பணத்தை திருடிய வங்கி ஊழியர்..!    மும்பை: ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் ஃபிக்சட் டெபாசிட்டில் இருந்து 3 கோடி ரூபாய் பணத்தை திருடி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மீனாட்சி கபூரியா என்ற 53 வயது பெண் மும்பையை சேர்ந்தவர்.    3D printing, 3d printers at very low cost இவர் ஹெச்டிஎப்சி வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் கணக்கு தொடங்கி 3 கோடி ரூபாயை போட்டு வைத்துள்ளார். வங்கியில் அவரது ரிலேஷன்ஷிப் மேனேஜராக பணிபுரிந்து வந்த பாயல் கோத்தாரி என்ற 27 வயது பெண் அந்த பணத்தை தன்னுடைய கணக்கிற்கு மாற்றியுள்ளார். இது தொடர்பாக மீனாட்சி கபூரியா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அப்போது காவல்துறையினர் இந்த விவகாரத்தை பாயல் கோத்தாரியை கைது செய்யாமல் சமரசம் செய்ய முயன்றுள்ளனர். இதனை அடுத்து மீனாட்சி கபூரியா மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.   Customised gifts அப்போது தான் பாயல் கோத்தாரி செய்த முறைகேடுகள் அனைத்தும் பாயல் கோத்தாரி மீனாட்சி கபூரியாவின் கணக்கில் மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி உள்ளிட...

மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!

Image
  மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!      எத்தனையே செயல்களை செய்துவரும் செயற்கை நுண்றிவு எனப்படும் செய்யறிவு மூலம், ஒருவரது மரணம் எப்போது நிகழும் என்பதையும் கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.   இதற்காக டெத் கிளாக் எனப்படும் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்தது என்னவோ கடந்த ஜூலையில். இது பற்றி பரவலாகப் பேசப்படுவது தற்போதுதான். Low cost high quality 3d printing services in Chennai ஒருவரது வயது, உயரம், எடை, தினமும் சாப்பிடும் உணவு, உடற்பயிற்சி அளவு உள்ளிட்ட தகவல்களை அளித்தால், அது அவரது மரணம் எப்போது நிகழும் என்பதை துல்லியமாகக் கூறிவிடுமாம். ஆனால், எந்த வகைகளில் எல்லாம் வாழ்முறையை மாற்றினால், இதனை மாற்றியமைக்கலாம் என்பதையும் அது கூறுகிறதாம்.   இதுவரை கிட்டத்தட்ட 5.3 கோடி பேர் இதனைப் பயன்படுத்தி தங்களது மரண தேதியை அறிந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 1.25 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். உடல்நலம் மற்றும் உடற்பயற்சிகளில் அதிகம் கவனம் செலுத்துபவர்களுக்க...

ஒரே ஆளா வந்து 2000 கார்களை வாங்கிட்டு போயிட்டாங்க !!!

Image
  இந்தியாவின் மின்சார பயணிகள் வாகன பிரிவில் நம்பர் 1 பிராண்டாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) உள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் நெக்ஸான்.இவி (Nexon.ev), டிகோர்.இவி (Tigor.ev), டியாகோ.இவி (Tiago.ev) மற்றும் பஞ்ச்.இவி (Punch.ev) உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.        இத்துடன் எக்ஸ்பிரஸ்-டி இவி (XPRES-T EV) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது பலர் அறியாத எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். ஏனெனில் டாடா மோட்டார்ஸ் இந்த எலெக்ட்ரிக் கார் மாடலை டி-போர்டு பிரிவில் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.     அதாவது, தனி நபர் பயன்பாட்டிற்கு இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிக் கொள்ள முடியாது. அதேவேளையில், பெரு நிறுவனங்கள் அல்லது வாடகை வாகன சேவை இதுபோன்ற பொது பயன்பாட்டிற்காக மட்டுமே இந்த காரை வாங்கிக் கொள்ள முடியும். இதனால்தான் இந்த கார் மாடல் அந்த அளவிற்கு தனி நபர்கள் மத்தியில் பிரபலமடையவில்லை. அதேவேளையில் கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் வாடகை வாகன சேவை நிறுவனங்கள் மத்தியில் புகழ்பெற்ற கார் மாடலாக எக்ஸ்பிரஸ்...

Kilambakkam Bus Stand: ஹாப்பி! ரூ.40 இருந்தால் போதும் சென்னையில் எங்கும் பயணிக்கலாம்! கிளாம்பாக்கத்தில் புதிய சேவை!

Image
  Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.  கிளாம்பாக்கத்தில் புதிய சேவை:   இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் , ' டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுக்கிணங்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , இன்று (29.02.2024)  தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40/- கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.   

National Science Day!. உலகமே வியந்த இந்தியாவின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் சிறப்பு தொகுப்பு

Image
  National Science Day!. உலகமே வியந்த இந்தியாவின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் சிறப்பு தொகுப்பு:      National Science Day 2024: 1928 ஆம் ஆண்டு முதல் பி.ப்.,28ம் தேதியை நாம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறோம்.   இதைப் பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமெனில் முதலில் சர். சி.வி. ராமனின் கண்டுபிடிப்பை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்நாளை தேசிய அறிவியல் தினமாக மாற்றியது, அறிவியலின் திருப்புமுனையாக அமைந்த இவருடைய ‘ராமன் எஃபெக்ட்’ என்ற ஒளியைப் பற்றிய கண்டுபிடிப்பு தான். இவர் ஒரு சிறிய பரிசோதனையில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒளி ஒரு திரவத்தின் வழியாக செல்லும் பொழுது ஒளி சிதறல் நிகழ்கிறது. திரவத்தால் சிதறிய ஒளியின் ஒவ்வொரு பகுதியும் வேறு நிறத்தில் இருந்தது. இதை இவர் 1928 ல் கண்டறிந்தார். இந்த விளைவை கண்டறிந்ததை அறிவித்த பிறகு ஏழு ஆண்டுகளில் 700 ஆய்வு கட்டுரைகள் வெளியாகின.    ராமன் எஃபெக்டை கண்டறிந்ததற்காக 1930 ல் இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், நோபல் பரிசு பெற்ற முதல் தமிழரும் இவர்தான். இதுமட்டுமல்லாமல், இவர் கண்டறிந்த ரா...

வீட்டு மாடியிலேயே Take-Off, Landing பண்ணலாம்., எலக்ட்ரிக் ஏர் காப்டர்களை அறிமுகப்படுத்தும் Maruti Suzuki

Image
  வீட்டு மாடியிலேயே Take-Off, Landing பண்ணலாம்., எலக்ட்ரிக் ஏர் காப்டர்களை அறிமுகப்படுத்தும் Maruti Suzuki                 நாளுக்கு நாள் அதிநவீன தொழில்நுட்பம் வந்துகொண்டிருப்பதால், ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்கள் மற்றும் கார்கள் உற்பத்தி எளிதாகி வருகிறது.      முன்னதாக ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்கள் மற்றும் மின்னணு சாதனங்களை தயாரித்த நிறுவனங்கள் கார் உற்பத்தியில் இறங்கியுள்ளன.    அந்த வரிசையில், நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான 'Maruti Suzuki' முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஜப்பானின் தாய் நிறுவனமான சுசூக்கியுடன் (Suzuki) இணைந்து Electric Air Copter-ஐ உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த 'எலக்ட்ரிக் ஏர் காப்டரில்' விமானியுடன் மூன்று பயணிகள் பயணம் செய்யலாம். இந்த 'எலக்ட்ரிக் ஏர் காப்டர்கள்' இது ட்ரோன்களை விட பெரியது மற்றும் வழக்கமான ஹெலிகாப்டர்களை விட சிறியது.  எலக்ட்ரிக் ஏர் காப்டரின் எடை வழக்கமான ஹெலிகாப்டரில் பாதி, அதாவது 1.4 டன். இந்த அளவிற்கு எடை குறைவாக இருப்பதால், அதனை வீட்டின் மொட்டை மாடியில் தரையிறக...

சென்னையில் இருந்து திருச்சி உள்பட சில மாவட்டங்களுக்கு மாதவரத்தில் இருந்து விரைவு பேருந்து சேவை தொடங்கியது!!!!

Image
  சென்னையில் இருந்து திருச்சி உள்பட சில மாவட்டங்களுக்கு மாதவரத்தில் இருந்து விரைவு பேருந்து சேவை தொடங்கியது.!      சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சர்ச்சையைத் தொடர்ந்து, சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்த திருச்சி வரை சில மாவட்டங்களுக்கு விரைவு பேருந்து சேவை அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த பேருந்து சேவையை இன்று அமைச்சர் சிவசங்கர் மாதவரம் பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார். அதற்கான கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.        தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இயக்குவதில் சிக்கல்கள் நீடித்து வருகிறது. போதிய கழிப்பிடமோ, உணவகமோ, பேருந்து நடத்தும் இடமோ இல்லாத கிளாம்பாக்கத்தை அவசர அவசரமாகத் திறந்து மக்களை அலைக்கழிக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அந்த பேருந்து முனையத்திற்கு செல்லவே இரண்டு முதல் 3மணி நேரம் ஆவதுடன், பொதுமக்களின் பணமும் வீணாகிறது.     மேலும், அங்கு செல்ல முறையான சென்னையில் பல பகுதிகளில் இருந்து முறையான பேருந்து வ...

பனியை பணியவைக்கும் ட்ரோன்

Image
  பனியை பணியவைக்கும் ட்ரோன்!!!!      குளிர் பிரதேசங்களில் வீடுகள், சாலைகள், வாகனங்கள் ஆகிய அனைத்தின் மீதும் பனி படரும். பல நேரங்களில் காற்றாலைகளிலும் பனி படரும்.      இவ்வாறு பனி சேர்ந்து கட்டிகளாக மாறும்போது, காற்றாலைகளின் சுற்றும் வேகம் குறையும். பனி மூன்று விசிறிகளிலும் ஒரே அளவில் இல்லாவிட்டால் நிலைதடுமாறி காற்றாலையே உடைந்து போகும் சாத்தியமும் உள்ளது.     பனி படராதபடி தடுப்பதற்கு ஏதுவாக, காற்றாலையை உருவாக்கும் போதே, அவற்றின் உள்ளே சில வெப்பமூட்டிகள் வைக்கப்படுவது வழக்கம்.   சில நேரங்களில் பனி ஒட்டாதபடி ரசாயனங்களை ஹெலிகாப்டர் மூலம் விசிறிகளில் தெளிக்கும் முறையும் பின்பற்றப்படுகிறது. ஆனால், இவை இரண்டுமே அதிக செலவுமிக்கவை. இதற்கு மாற்றாகத் தான் ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் ஆய்வுக் குழு, ட்ரோன்களைப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளது. இந்த முறையில் யூரியா, மெழுகு அல்லது சில குறிப்பிட்ட ரசாயனங்களை ட்ரோனில் அனுப்பி அதிக அழுத்தத்தில் விசிறிகள் மீது பாய்ச்சுகின்றனர்.     இவை பூசப்பட்ட பின்னர், சில வாரங்கள் வரை, இவற்றின் மீது ப...

சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரியை உருவாக்கிய சீன நிறுவனம்

Image
  சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் பேட்டரியை உருவாக்கிய சீன நிறுவனம்!!!!       சீன Startup நிறுவனம் ஒன்று புதிய வகை பேட்டரியை தயாரிப்பதாக கூறியுள்ளது.      தங்கள் பேட்டரி 50 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், சாதாரண பேட்டரிகளைப் போல நிலையான சார்ஜிங் அல்லது பராமரிப்பு தேவைப்படாது என்றும் நிறுவனம் கூறுகிறது.      63 அணுசக்தி ஐசோடோப்புகளை (nuclear isotopes) ஒரு நாணயத்தை விட சிறிய தொகுதியாக வைத்து, அணுசக்தியை miniaturisation செய்வதை உலகிலேயே முதன்முதலில் இந்த பேட்டரி தான் என்று சீனாவின் Betavolt நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அடுத்த தலைமுறை பேட்டரி ஏற்கனவே சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதியில் அவை தொலைபேசிகள் மற்றும் ட்ரோன்கள் போன்றவற்றில் வணிக பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படும் என்று கூறியுள்ளது. விண்வெளி, AI உபகரணங்கள், மருத்துவ சாதனங்கள், நுண்செயலிகள், மேம்பட்ட சென்சார்கள், சிறிய ட்ரோன்கள் மற்றும் மைக்ரோ ரோபோக்கள் போன்ற பல விஷயங்களில் இந்த அணுசக்தி பேட்டரிகள் நீண்ட கால மின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியு...

அட்டைப்பெட்டிக்கு பதிலாக ஊழியரை பிடித்து நசுக்கிய ரோபோ.. அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள்..!!

Image
அட்டைப்பெட்டிக்கு பதிலாக ஊழியரை பிடித்து நசுக்கிய ரோபோ.. அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள்..!!     பெட்டி என நினைத்து வேலை செய்யும் ஊழியரை ரோபோ எடுத்து பெட்டிக்குள் வைத்த சம்பவம் பெரும். அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.    தென்கொரீயாவில் உள்ள தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாய விளைபொருள் விநியோக மையத்தில் காய்கறிப் பெட்டிகளை எடுத்து சீல் செய்யும் பணிக்கு ரோபோக்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரோபோவின் சென்சார் செயல்பாடுகளை அங்கு உள்ள ஊழியர் ஒருவர் ஆய்வு செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. நிறுவன ஊழியரை காய்கறிப் பெட்டி என நினைத்து தூக்கி கன்வேயர் பெல்ட்டில் வைத்திருக்கிறது.      ரோபோவின் இறுக்கமான பிடியிலிருந்து அந்த ஊழியர் தப்ப முடியாமல் திணறியுள்ளார். கன்வேயர் பெல்ட் உள்ளே சென்ற அந்த ஊழியரின் முகம் மற்றும் மார்பு பகுதி நசுக்கப்பட்டது. படுகாயமடைந்த நிலையில் அந்த ஊழியரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.    ரோபோவிடம் சிக்கி பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக மே மாத தொடக்கத்தில்...

மார்கெட் காலி.. வெறும் ரூ.10,000 பட்ஜெட்ல 16GB ரேம்.. 45W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. எந்த போன்?

Image
  மார்கெட் காலி.. வெறும் ரூ.10,000 பட்ஜெட்ல 16GB ரேம்.. 45W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. எந்த போன்?        பிளிப்கார்ட் விற்பனையில் மிரளும் டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.10000 பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 45W சார்ஜிங், 6000mAh பேட்டரி போன்ற மூக்கில் விரல் வைக்கும்படியான அம்சங்களுடன் டெக்னோ போவா 5 (TECNO POVA 5) விற்பனை  செய்யப்படுகிறது.      டெக்னோ போவா 5 அம்சங்கள் (TECNO POVA 5 Specifications): இந்த டெக்னோ போவா மாடல் டர்போ மெக்கா டிசைன் (TURBO MECHA DESIGN) கொண்ட பேக் பேனல் கொண்டுள்ளது. அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு எல்சிடி டிஸ்பிளே மாடலாகும். இந்த டெக்னோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் வருகிறது. அதோடு ஹாய்ஓஎஸ் 13 (HiOS 13) மற்றும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 (Arm Mali-G57 MC2) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.      இந்த டெக்னோ போவா போனில்...

சென்னை புறநகர் ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம்!!!!

Image
  சென்னை புறநகர் ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம்!!!!         சென்னை புறநகர் மின்சார ரயிலில் விரைவில் குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.         சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த ரயிலில் பெண்களுக்கான தனி பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளும் உள்ளன. சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.                        சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தனி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 700 ரயில்களுக்கு மேல் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் வழித்தடத்தை மாநில அரசிடம் முழுமையாக ஒப்படைக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே மேலாளர் தெரிவித்திருந்தார். மேலும், இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களை மெட்ரோ ரய...

இனி பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க குறைதீர்வு எண் மற்றும் வலைதளம் தொடக்கம்..!

Image
  இனி பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க குறைதீர்வு எண் மற்றும் வலைதளம் தொடக்கம்..!        ஊரகப் பகுதிகளில் ஏற்படும் குறைகளை களையும் பொருட்டு 'ஊராட்சி மணி' என்கிற அமைப்பு ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.      இதன்மூலம், பொதுமக்கள், தங்கள் குறைகளைத் தெரிவிக்கஊராட்சிகளைத் தொடர்பு கொள்ளும் வகையில் இலவச குறைதீர்வு அழைப்பு எண் '155340' மற்றும் 'Ooratchimani.in' என்ற வலைதளம் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை மூலம் பொதுமக்கள் எளிதில் அணுக முடியும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் புகார் மீது தீர்வு காணப்படும். மேலும் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள்ஆகியோருக்கு ஏற்படும் குறைகள், சந்தேகங்களை 'ஊராட்சி மணி' மூலம் அணுகி பதில் பெறும்வகையில் இச்சேவை உருவாக்கப்பட்டுள்ளது.     இந்த சேவையை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ப.செந்தில்குமார், இயக்குநர் பா.பொன்னைய...

மோடிக்கு டீ வழங்கும் ரோபோ

Image
  மோடிக்கு டீ வழங்கும் ரோபோ  !!!!!    அகமதாபாத்:குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள அறிவியல் நகருக்கு சென்று அங்குள்ள ரோபோக்களை ஆர்வத்துடன் பார்வையிட்டார்.     ரோபோட் கேலரியில் உள்ள டிஆர்டிஓ ரோபோக்கள் மற்றும் மைக்ரோபோட்கள் குறித்து பிரதமர் மோடி விசாரித்தார். விவசாயம், மருத்துவம், விண்வெளி என பல்வேறு துறைகளில் பல்வேறு ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதை பார்த்தனர். ரோபோட் கேலரியில் உள்ள ஓட்டலுக்குச் சென்ற மோடிக்கு அங்கிருந்த ரோபோக்களால் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.      

இன்ஸ்டாவை போலவே வாட்ஸ்அப்-லும் Channel அம்சம் அறிமுகம்.. அது என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?

Image
  இன்ஸ்டாவை போலவே வாட்ஸ்அப்-லும் Channel அம்சம் அறிமுகம்.. அது என்ன? அதை எப்படி பயன்படுத்துவது?         உலகளவில் பிரபலமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் நிறுவனம் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது. மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு பல்வேறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் Channels என்ற புதிய ஒளிபரப்பு அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள பிராட்காஸ்ட் சேனல் அம்சத்தைப் போலவே, மெட்டாவின் வாட்ஸ்அப் இப்போது பயனர்கள் Channel மூலம் அதிக குழுக்களுக்கு செய்திகளை அனுப்ப உதவுகிறது.    வாட்ஸ்அப் Channels வழக்கமான சேட்களில் இருந்து மாறுபட்டது. அது பின் தொடர்பவர்களின் அடையாளங்கள் மற்ற பின்தொடர்பவர்களுக்கு ரகசியமாக இருப்பதை உறுதிசெய்கிறது. மேலும் Channel என்பது ஒரு வழி ஒளிபரப்பு கருவியாக செயல்படுகின்றன. அட்மின், பின்தொடர்பவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் Channel, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வா...

சூப்பர் நியூஸ்..! மெட்ரோ ரயிலில் நாள் முழுவதும் பயணம் செய்யும் சிறப்பு திட்டம் அறிமுகம்..!

Image
  சூப்பர் நியூஸ்..! மெட்ரோ ரயிலில் நாள் முழுவதும் பயணம் செய்யும் சிறப்பு திட்டம் அறிமுகம்..!         சென்னையில் ஓரிடத்திற்கு விரைவாக செல்ல வேண்டுமென்றால் சென்னையில் வசிக்கும் பலரும் மெட்ரோ ரயில் பயன்படுத்துகின்றனர்.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் பயணித்திருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.       இந்நிலையில் பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய சலுகையை சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.அதன்படி 100 ரூபாயில் நாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் சென்று வரும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.அதாவது ஒரு சுற்றுலா அட்டையை 150 ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும். அதில் வைப்புத் தொகை 50 ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்படும். இந்த சுற்றுலா அட்டை ஒரு நாள் மட்டுமே செல்லும். அந்த அட்டையை திருப்பிக் கொடுக்கும் போது 50 ரூபாய் திருப்பி தரப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்திருக்கிறது.                               ஞாயிறு விடுமுறை தினங்களை ஒட்டி ...

சென்னை சென்ட்ரலில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ரயில் உணவகம் - பயணிகள் வரவேற்பு!

Image
  சென்னை சென்ட்ரலில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ரயில் உணவகம் - பயணிகள் வரவேற்பு!!!!!      சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பல்வேறு ஹோட்டல்கள் இருந்தாலும், தற்போது பலரின் கவனத்தையும் ஈர்ப்பது புதிதாக திறக்கப்பட்டுள்ள ரயில் உணவகம்தான்.      ரயில் பெட்டி போலவே அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில், குளிர்சாதன வசதியுடன் குறைந்த விலையில் உணவுகள் விற்கப்படுகின்றன. இங்கு ஒருநேரத்தில் சுமாா் 40 பேர்  உணவகத்தின் கீழ்தளத்தில் அமா்ந்தும், 110 பேர்  வரை உணவகத்தின் வெளியே இருந்தும், 26 பேர்  உணவகத்தின் மேல்தளத்தில் அமா்ந்தும் உணவு உண்ணலாமென சொல்லப்படுகிறது. காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் இந்த ஹோட்டலை சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் நேற்று திறந்து வைத்துள்ளார். தண்டவாளத்தில் நிற்பது போன்று இரண்டு ரயில் பெட்டிகளில் இந்த உணவகம் செயல்படுகிறது. ரயில் இருக்கைகள் போன்றே இங்கும் இருக்கைகள் உள்ளன.   சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வெளியே, அமர்ந்து தேநீர் குடிப்பதற்கு இதுவரை எந்த இடமும் இல...

தம்மாத்துண்டு Ringல இவ்ளோ டெக்னாலஜியா? வயர்லெஸ் சார்ஜிங்.. ஹெல்த் மானிட்டர் வேற.. எந்த மாடல்?

Image
  தம்மாத்துண்டு Ringல இவ்ளோ டெக்னாலஜியா? வயர்லெஸ் சார்ஜிங்.. ஹெல்த் மானிட்டர் வேற.. எந்த மாடல்?   ஒரு விரலில் மாட்டும் மோதிரத்தில் 24 மணி நேர ஹார்ட் ரேட், பிளட் ஆக்ஸிஜன் லெவல் உள்ளிட்ட 6 ஹெல்த் மானிட்டர்கள், மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பிரம்மாண்ட அம்சங்கள் வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?     போட் ஸ்மார்ட் ரிங் அம்சங்கள் (boAt Smart Ring Specification): இந்த ஸ்மார்ட் ரிங்கில் ஆக்டிவிட்டி டிராக்கிங் (Smart Activity Tracking) வருகிறது. இதன் மூலம், உங்களது பிசிகல் ஆக்டிவிட்டிகளான வாக்கிங், ரன்னிங், ரைடிங், டான்ஸ் போன்றவற்றை டிராக் செய்து, கலோரிகள் பர்னிங்கை (Calories Burning) கணக்கீடு செய்துகொள்ள முடியும்.    இந்த போட் ரிங்கில் மொத்தமாக 5 ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) வருகின்றன. அந்த வகையில், ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பாடி டெம்பரேச்சர் மானிட்டர் (Body Temperature Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), மென்சுரல் டிராக்கிங் மானிட்டர் (Menstrual Tracking Monitor) மற்றும் பிளட் ஆக்ஸிஜ...

இது தெரியுமா ? இந்தியாவின் முதல் 3-டி தபால் அலுவலகம் பெங்களூருவில் திறப்பு..!

Image
  இது தெரியுமா ? இந்தியாவின் முதல் 3-டி தபால் அலுவலகம் பெங்களூருவில் திறப்பு..!!!!!!      கட்டுமான தொழில்நுட்பத்தின் புதிய புரட்சியாக 3டி பிரிண்டிங் முறை அறிமுகமாகி வருகிறது. இந்தியாவின் முதல் 3டி பிரின்டிங் வீடு, சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் திறந்து வைக்கப்பட்டது.         ராணுவ கட்டுமானங்களுக்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சியின் அடிப்படையில் கவுஹாத்தி ஐஐடி மூலம் ராணுவ நிலை அலுவலகங்கள் கடந்த ஆண்டு கட்டப்பட்டன. தெலங்கானாவின் சித்திபெட் பகுதியில் 3,800 சதுர அடி பரப்பளவில் கோவில் ஒன்று 3டி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கட்டப்பட்டு வருகிறது.       இதன் தொடர்ச்சியாக, 3டி பிரின்டிங் முறையில் கட்டப்பட்ட முதல் தபால் நிலையம் பெங்களூருவில் நேற்று திறக்கப்பட்டது. பெங்களூருவின் உல்சூர் பசார் அருகே உள்ள கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் கட்டப்பட்டுள்ள இந்த தபால் நிலையத்தை மத்திய ரயில்வே, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழ...